ட்ரைஃபிள் புட்டிங்

தேவையானவை:

பிளெய்ன் ஸ்பான்ச் கேக் – 250 கிராம்,

நறுக்கிய அன்னாசிப்பழம் – 50 கிராம்,

நறுக்கிய ஆப்பிள் – 50 கிராம்,

செர்ரி – 25 கிராம்,

கஸ்டர்டு பவுடர் – 20 கிராம்,

சர்க்கரை – 100 கிராம்,

ஃப்ரெஷ் க்ரீம் – 50 மில்லி,

ஃப்ரூட் ஜாம் – 50 கிராம்,

பால் – அரை லிட்டர்.

செய்முறை:
பாலில் கஸ்டர்டு பவுடர், சர்க்கரை, சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு ட்ரேயில் பிளெய்ன் ஸ்பான்ச் கேக் வைத்து, ஜாம் தடவி, அதன்மேல் பழங்களை வைத்து, அதன் மேல் இன்னொரு ஸ்பான்ச் கேக் வைத்து, பால் கலவையை அதில் ஊற்றி, செர்ரி சேர்த்து… ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

 

Leave a Reply