மினிஸ்ட்ரோன் சூப்

தேவையானவை:

வெங்காயம் – 10 கிராம்,

பொடியாக நறுக்கிய பூண்டு – 10 கிராம்,

நறுக்கிய தக்காளி – 20 கிராம்,

விதை நீக்கிய தக்காளியின் சாறு – 100 மில்லி,

கேரட் – 20 கிராம்,

நறுக்கிய செலரி – 20 கிராம்,

பீன்ஸ் – 10 கிராம்,

கறுப்பு மிளகு – 10 கிராம்,

பாஸ்தா – 20 கிராம்,

தைம் – ஒரு சிட்டிகை,

வெண்ணெய் – 20 கிராம்,

துருவிய சீஸ் – சிறிதளவு,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: 

கடாயில் வெண்ணெய் சேர்த்து,  பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கி, பின்னர் தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, கேரட், செலரி, பீன்ஸ், தைம், உப்பு, கறுப்பு மிளகு ஆகிய அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும். பிறகு பாஸ்தா சேர்த்து மீண்டும் 15 நிமிடம் வேகவைக்கவும் (பாஸ்தா நன்கு வேகும் வரை). பிறகு, துருவிய சீஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

Leave a Reply