பேஷியன் ஃப்ரூட் ஜூஸ்

என்னென்ன தேவை?

மஞ்சள் பேஷியன் ஃப்ரூட்-5 அல்லது 6
தண்ணீர்- தேவைக்கேற்ப
சர்க்கரை- தேவைக்கேற்ப
எப்படி செய்வது?

மஞ்சள் நிறத்தில் உள்ள பேஷியன் ஃப்ரூட் பழங்களை பழுத்ததாக பார்த்து வாங்கி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதை இர ண்டாக வெட்டி ஸ்பூனை பயன்படுத்தி அதன் உள்ளே இருக்கும் சதைகளை ஜாரில் போட்டு, அதில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து  மிக்சியில் அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த சாறுகளை வடிகட்டியில் ஊற்றி விதையின் தூள்களை நீக்கிவிடவேண்டும். அதன்  பின்னர் மீண்டும் 3 மடங்கு ஐஸ் தண்ணீரை ஊற்றி, சர்க்கரையை சேர்த்து கலக்கவேண்டும். பின்னர் ஒரு பாட்டிலில் ஜூசை ஊற்றி  குளிர்பதனபெட்டியில் வைத்துவிட்டு தேவைப்படும் போது எடுத்து பருகலாம்.

Leave a Reply