அவல் கட்லெட்

தேவையான பொருள்கள்:

அவல் – 200 கிராம்,
தேங்காய் – 1,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 10,
பெருங்காயம் , கடுகு – சிறிது, உப்பு, நெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

அவலைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து கிரைண்டரில் போட்டு உப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதில் பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுப் பிசைந்து எடுக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து பிசைந்த மாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

அதை பெரியவட்டமாக தட்டி அடைக் கல்லில் நெய்யைத் தடவி அதில் வைக்க வேண்டும்.

ஒரு பக்கம் பொன் முறுவலுடன் திருப்பி மறுபக்கம் போட்டு நெய் ஊற்றி மொறு மொறுவென வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

Leave a Reply