கோவா கடலை மாவு லட்டு ரெசிபி (கோயா பேசன் லட்டு ரெசிபி)

தேவையான பொருட்கள்:
1/2 கப் கடலை / கடலை மாவு
1/2 கப் உதிர்த்த கோவா / கோயா / மாவா,
1/2 கப் + 2 டீஸ்பூன் சர்க்கரை
1/4 தேக்கரண்டி ஏலக்காய்
1/4 கப் நெய் (உருக்கியது)
திராட்சை அழகுபடுத்த

செய்முறை:
சர்க்கரையை நன்றாக நைசாக அரைத்து கொண்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான அடிப்பாகமுடைய கடாயில் நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடம் வரை விடாமல் ஒரு நல்ல வாசனை வரும் வரை இதை கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு.உதிர்த்து வைத்துளள கோவாவை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

கொஞ்சம் ஆறிய பிறகு அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரையும், ஏலக்காய் தூளையும் சேர்க்கவும். இதை நன்கு கலந்து கிளறிக் கொள்ளவும்.

கை பொறுக்கும் அளவு ஆறிய பின் இதை லட்டுக்களாக உருண்டை பிடிக்கவும்.

நன்கு ஆறியதும், இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்

Leave a Reply