செம்பருத்தி பூ கற்கண்டு டீ

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூ – 4
ஏலக்காய் – 2
பனங்கற்கண்டு – தேவைக்கு
தண்ணீர் – 400 மி.லி.

செய்முறை:

* செம்பருத்தி பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு, இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஏலக்காய் தூள் கலந்து, சுவைக்கு பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும். * காலை தேநீருக்கு சிறந்த மாற்று பானம் இது. இதை பருகினால் உடலுக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கும்.

குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டை தவிர்த்து விடவும்.

Leave a Reply