வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்:

நாட்டு வாழைக்காய் – 5
கடலைப்பருப்பு – 150 கிராம்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகப்பொடி – 2 டீ ஸ்பூன்
தேங்காய் மூடி – 1 சிறியது
சின்ன வெங்காயம் – 4

தாளிக்க:

மிளகாய் வத்தல் – 5
கடுகுஉளுந்து – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 6
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* கடலைப்பருப்பை இரண்டு மணிநேரத்திற்கு முன்பே ஊறவைத்துக்கொள்ளவும்.

* வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* ஊறவைத்த கடலைப்பருப்பில் மஞ்சள்தூள், சீரகப்பொடியுடன் வெங்காயத்தை தட்டிப் போட்டு வேகவைக்கவும். (முக்கால் வேக்காடு வேகவைத்தால் போதும்)

* வெந்த கடலைப்பருப்பில் பொடியாக நறுக்கி வைத்த வாழைக்காய், உப்பு சேர்த்து 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

* தேங்காய் துறுவலை வழுவழுவென்று அரைக்காமல் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.

* பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, மிளகாய்வத்தல், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

* வத்தல்குழம்பு, ரசத்துக்கு பொருத்தமான சைட் டிஷ் இது.

Leave a Reply