மில்க் பர்ஃபி

மில்க் பர்ஃபி தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்

மில்க் பர்ஃபி செய்முறை

ஒரு கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலையும், சர்க்கரையையும் சேர்த்து, கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாலில் உள்ள தண்ணீரெல்லாம் வற்றி, இறுகும் நிலை வரும் பொழுது அடுப்பை அணைத்து, அந்த சூட்டிலேயே நாலு கிளறு கிளறி, ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். கையில் ஒட்டாத பதம் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி துண்டுகள் போடவும்.

Leave a Reply