“மஸ்கட் செய்யும் முறை

தேவையான பொருட்கள்
மைதா – 500 கிராம்
சீனி – 500 கிராம்
நெய் – 300 கிராம்
தண்ணீர் – 1 1/2 போத்தல்
ஏலம் – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
திராட்சை – 2 மேசைக்கரண்டி
கேசரிப் பவுடர் – ஒரு சிட்டிகை

செய்முறை :
மைதாவை ஒரு துணியில் கட்டி 1 1/2 போத்தல் தண்ணீரில் 8 மணித்தியாலம் ஊறவைக்க வேண்டும்.
பின்பு அதனை எடுத்து பிசைந்து பால் போல் எடுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு சீனியையும் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
கலவை இறுகி வரும் போது சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
கேசரிப் பவுடரையும் சிறிதளவு நீரில் கரைத்துவிடவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூளையும் சேர்த்துப் போடவும்.
இக்கலவையில் சிறிதளவு உருட்டிப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.
அப்பொழுது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, அழுத்தி விரும்பிய வடிவில் வெட்டிப் பரிமாறலாம்.

Leave a Reply