முட்டை உருளை மசாலா

தேவையான பொருட்கள்:-

முட்டை – 2
உருளைக்கிழங்கு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன் (தூள்)
வினிகர் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
எண்ணெய் – 15 கிராம்

செய்முறை:-

முட்டையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணெயில் மிளகு, சீரகம் வறுத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

இப்போது உருளைக்கிழங்கு, முட்டையை போட்டு வதக்கவும்.

சிறிது தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வதக்கவும். பிறகு மீதியுள்ள வெங்காயத்தை போட்டு பிரட்டி, வினிகர் சேர்த்து இறக்கவும்.

Leave a Reply