செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

என்னென்ன தேவை?

காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40
கொத்தமல்லி விதை – 1 கப்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 தேக்கரண்டி
கருப்பு மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?

கடாயை அடுப்பில் வைத்து மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். பின் கொத்தமல்லி விதை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, இவை அனைத்தையும் கலந்து ஒன்றாக வறுக்க வேண்டும். கருகிவிடாமல் பார்த்து பதத்திற்கு வறுக்க வேண்டும். பின் மஞ்சள், பெருங்காயம், கலந்து கிளறி ஆறவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். குழம்பு செய்யும் போது தேவையான அளவு பயன்படுத்தலாம்.

Leave a Reply