கொள்ளு- பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 1/2 கப்
மிளகு – 20
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீ ஸ்பூன்

செய்முறை:

* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.

* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.

* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.

* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.

* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

உபயோகிக்கும் முறை:

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.

பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, ‘கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.

Leave a Reply