ட்ரைஃபில் புட்டிங்

என்னென்ன தேவை?
ஸ்லைஸ் செய்த கேக் – 4,
பொடியாக நறுக்கிய பழங்கள்  (செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி) – 2 கப்.
கஸ்டர்ட் செய்ய…
கஸ்டர்ட் பவுடர் – 1 கப், குளிர்ந்த பால் (கரைப்பதற்கு) – அரை கப்,
பால் – 4 கப்,
சர்க்கரை – 1 கப்.
கஸ்டர்ட் செய்யும் முறை…

குளிர்ந்த பாலுடன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு மீதி பாலை சூடாக்கவும். அதில் கஸ்டர்ட் பவுடரை  கலந்து, கை விடாமல் கலக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கைவிடாமல் கலக்கவும். கட்டியில்லாமல் நன்கு அடித்துக் கலந்து, ஆற வைக்கவும்.

ஜெல்லி செய்ய…

ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி – 1 பாக்கெட்,
தண்ணீர் – 500 மி.லி.,
சர்க்கரை – அரை கப்.

ஜெல்லி செய்யும் முறை…

அடுப்பில் தண்ணீர் காய்ந்ததும், ஜெல்லி சேர்த்துக் கொதிக்க விடவும். பின் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கீழே இறக்கி வைத்து, ஆறியதும்  ஒரு டிரேயில் கொட்டி, ஃப்ரிட்ஜில் செட் செய்யவும்.

எப்படிச் செய்வது?

ஒரு புட்டிங் பாத்திரத்தை எடுத்து, கீழே ஒரு ஸ்லைஸ் கேக் வைக்கவும். அதன் மேல் தயாராக வைத்துள்ள கஸ்டர்டை சிறிது கொட்டித் தடவவும். ரெடியாக வைத்துள்ள பழங்களைத் தூவவும். அதன் மேல் ஜெல்லியை பரத்தவும். மீண்டும் இதையே இரு முறைகள் செய்யவும். கடைசியில் கஸ்டர்ட்
கலவையை மேலே பரத்தி, பழங்களைக் கொண்டு அலங்கரித்து, சுமார் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் செட் செய்து, பிறகு ஜில்லென பரிமாறவும். ஃப்ரீசரில்
வைக்கக் கூடாது.

Leave a Reply