பலாக்கொட்டை பூண்டு மசாலா

தேவையானவை:
பலாக்கொட்டை – 10 – 15
வெள்ளை பூண்டு – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
சாம்பார் பொடி – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
தாளிக்க:
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
1.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

2.பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதில் மிளகாய் வற்றல் சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

5.பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போக மசாலா திரண்டு வரும் வரை பிரட்டவும்.

6.பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போக மசாலா திரண்டு வரும் வரை பிரட்டவும்.

7.சுவையான பலாக்கொட்டை பூண்டு மசாலா தயார். சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் பக்க உணவாக பரிமாறவும்

Leave a Reply