மிஸ்ஸி ரோட்டி (குஜராத்தி ஸ்டைல்)

காரமான கடலை மாவு ரொட்டி
தயாரிப்பு நேரம்: 20 நிமிடங்கள்
சமையல் நேரம்: 15 நிமிடங்கள்
தயாரிக்கும் அளவு: 15 ரொட்டிகள்
தேவையான பொருட்கள்:
2 ¼ கப் கோதுமை மாவு (ஆட்டா)
2 ¼ கப் பருப்பு மாவு (கடலை மாவு)
½ கப் தயிர், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
1 தேக்கரண்டி ஓமம்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
½ தேக்கரண்டி சீரகம்
உப்பு சுவைக்கேற்ப‌
2 டீஸ்பூன் நெய்’

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி மென்மையாக மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். இதை 15 பகுதிகளாக உருண்டை செய்து கொண்டு மாவை சுமார் 4 “விட்டம் அளவிற்கு வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லை சூடுபடுத்திக் கொண்டு ரொட்டியை இரண்டு பக்கவும் ஒரே மாதிரி திருப்பி போட்டு சுடவும். பிறகு இந்த ரொட்டியை நேரடியாக அடுப்பு தணலில் தீயாதவாறு திருப்பி போட்டு சுடவும், இதே மாதிரி அனைத்து ரொட்டிகளையும் சுடவும். சுட்ட பின் சிறிது நெய் சேர்த்து சூடாக பரிமாறாவும்.
வேறுபாடுகள்: நன்கு நறுக்கிய கீரை அல்லது வெந்தய இலைகளை மாவு பிசையும் போது சேர்த்து பிசைந்தால் மிஸ்ஸி ரொட்டிக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

Leave a Reply