ரெட் காக்டெயில் ஜூஸ்

தேவையானவை:

தர்பூசணி – ஒரு பெரிய துண்டு
பிளம்ஸ் – 5 பழங்கள்
மாதுளை – ஒரு பழம்
தேன் – தேவையான அளவு
சுக்கு தூள் – அரை தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – ஒரு மேசை கரண்டி
தண்ணீர் – தேவைக்கு
ஐஸ் கட்டிகள் – எட்டு

செய்முறை:

• தர்பூசணியை கொட்டை நீக்கி இரண்டு கப் அளவு எடுத்து கொள்ளவும்.

• பிளம்ஸ் (ஊட்டி ஆப்பில்) கொட்டை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.

• மாதுளையில் இருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும்..

• ஜூஸ் அடிக்கும் மிக்சியில் அனைத்து பழங்கள், சுக்கு,தேவைக்கு தண்ணீர் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கரைய அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.

• வடிகட்டிய ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளை போட்டு பருகவும்.

Leave a Reply