உளுந்து வடை செய்யும் முறை

தேவையானவை:

உளுந்து – 1 கப்
ப.மிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10-15 இலைகள்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.

 

இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.

நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.

தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.

சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.

டிப்ஸ்:

வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.

வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

Leave a Reply