வெஜிடபிள் குழிபணியாரம்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – ஒரு கப்,
வெங்காயம் சிறியது – 1,
கேரட் துருவல், முட்டை கோஸ் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை :

• வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இட்லி மாவில் வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி – பச்சை மிளாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

• குழி பணியார சட்டியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும். வெந்ததும் திருப்பி விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

• சத்து நிரம்பிய இந்த பணியாரம், எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது.

Leave a Reply