கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்

தேவையான பொருட்கள்….

ஸ்வீட் சோளம் (sweet corn) – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
தர்பூசணி – ஒரு துண்டு
ஆப்பிள் – 1 கப்
உப்பு – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

செய்முறை….

• தர்பூசணியில் இருந்து கொட்டையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஸ்வீட் சோளம், பட்டாணியை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் சோளம், பட்டாணி போட்டு அதில் மிளகு தூள், உப்பு போட்டு கிளரவும்.

• பிறகு ஆப்பிள் மற்றும் தர்பூசணி, எலுமிச்சை சாறு போட்டு கிளறி பரிமாறவும்.

• மிகவும் சத்தான, சுவையான சாலட் ரெடி.

Leave a Reply