வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:

வெண்டைக்காய் –  15
பச்சைமிளகாய் – 2
தயிர் – 1 கப்
உப்பு – சிறிது
எண்ணெய்,கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – தாளிக்க

செய்முறை:

• பச்சைமிளகாய், வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக அரிந்து வைக்கவும்.

• ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், வெண்டைக்காய் இரண்டையும் சிறிது உப்பு தூவி, வதக்கி, தயிரில் சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

• சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

• வெண்டைக்காய் பச்சடி என்றாலே சாப்பிடும்போது புதிதாக செய்தால்தான் நன்றாக இருக்கும். முன்னமே செய்து வைத்தால் சாப்பிடும்போது கொஞ்சம் கொழகொழப்பு தெரியும்.

• முதலில் தயிரை தாளித்து வைத்துக்கொண்டு சாப்பிடப்போகும்போது வெண்டைக்காயை வதக்கியும் சேர்க்கலாம்.

Leave a Reply