கேரட் பொட்டுக்கடலை சாலட்

தேவையான பொருட்கள்:

கேரட்- அரை கிலோ
வெள்ளரிக்காய்- 1
பச்சை திராட்சை- 1
எலுமிச்சைச் சாறு- 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- சிறு துண்டு
பொட்டுக் கடலை- 4 ஸ்பூன்
கொத்தமல்லி,கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:-

• கேரட்டையும், வெள்ளரிக்காயையும் கழுவி தோல் நீக்கி தனித்தனியாகத் துருவிக் கொள்ளவும்.

* பச்சை திராட்சையை உதிர்த்துக் கொள்ளவும்.

• இஞ்சியை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் முடிந்த வரை நன்றாக அரைக்கவும்.

• ஒரு அகல பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், பச்சை திராட்சை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுத்து பொட்டுக்கடலை பொடி சேர்த்து ந‌றுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

• சுவையான கேரட் பொட்டு கடலை சாலட் தயார். இதை எல்லா வகை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

Leave a Reply