காளான்  தயிர் பூரி (மஷ்ரூம் தஹி பூரி)

என்னென்ன தேவை?

பானி பூரி – 6 (ரெடிமேடாக கிடைக்கிறது),
காளான் – 5 (அ) 6 (நறுக்கிக் கொள்ளவும்),
முழு பச்சைப்பயறு – 1/2 கப் (ஊறவைத்தது),
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
இனிப்பு சட்னி – தேவைக்கு,
தயிர் – 1/2 கப்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய
மல்லித்தழை - தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
ஓமப் பொடி,  காராபூந்தி  - அலங்கரிக்க.

இனிப்பு சட்னி செய்முறை…

புளி பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்,
பேரீட்சை – 4 (கொட்டை நீக்கியது),
காய்ந்த திராட்சை – 1 டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
துருவிய வெல்லம் – 1/4 கப்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.

நீரில் ஊறிய பேரீட்சை, திராட்சையை உப்பு, வெல்லம், மிளகுத்தூள் சேர்த்து புளி பேஸ்ட்டுடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சட்னி கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். இனிப்பு சட்னி ரெடி.

குறிப்பு: பச்சைப் பயறுக்கு பதில் பட்டாணி, விருப்பமான பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி இப்படி எது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். ஊறவைத்து உப்பு போட்டு வேகவிடவும்.

எப்படிச் செய்வது?

உதிர்த்த காளானை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கி, மல்லித்தழை தூவி கிளறவும். பூரியின் மேல் ஓட்டை போட்டு வதக்கிய காளான் – 1 டீஸ்பூன், பிறகு வேகவைத்த ஏதாவது ஒரு பயறு வகை போடவும். அடுத்து இனிப்பு சட்னி தூவவும். கடைசியாக கடைந்த தயிர் சேர்த்து, ஓமப்பொடி, காராபூந்தி (ரெடிமேடாக கிடைக்கும்) தூவி பரிமாறவும்.

Leave a Reply