மட்டன் ஆட்டிறைச்சி ஸ்டூ

தேவையான பொருட்கள்:

புதிய ஆட்டிறைச்சி: 1 கிலோ.
ஒன்றிரண்டாக நறுக்கிய‌ வெங்காயம்: 4
நன்கு நறுக்கிய‌ பூண்டு: 1 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய்: 2
இலவங்கப் பட்டை: 2
மிளகு: 8 – 10
பிரின்ஜி இலைகள்: 2-3
நெய்: இரண்டு தேக்கரண்டி
உப்பு: சுவைக்கேற்ப‌

செய்முறை:
ஆட்டிறைச்சியை நன்கு கழுவிக் கொண்டு, நெய்யை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, பிரஷர் குக்கரில் சேர்க்கவும். ஒன்னறை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து, மிதமான தீயில் 12 நிமிடம் அடுப்பின் மீது வைக்கவும்.

விசில் நன்கு இறங்கியதும் குக்கரை திறந்த்து மட்டன் நன்றாக வெந்து, வெங்காயம் நன்கு குழைந்து கெட்டியாக சாறு போல மாறிவிட்டதா என்று பார்க்கவும். இன்னும் தண்ணீர் அதிகமாக இருந்தால், மீண்டும் அடுப்பின் மேது குறைந்த தீயில் வைக்கவும்.

நன்கு கெட்டியானதும், நெய் சேர்த்து சூடாக பரிமாறவும். இந்த‌ அற்புதமான வாசனையையும், ருசியையும் நன்றாக சாப்பிட்டு அனுபவியுங்கள்

Leave a Reply