கோழிக்கறி ரைஸ் பிரியாணி

தேவையான பொருட்கள்
8 பேர் சாப்பிடலாம்tamil
60 மில்லி நெய் (மோரில் இருந்து எடுத்தது)
20 முழு கிராம்பு
9 முழு ஏலக்காய்tamil
5 பிரின்ஜி இலைகள்
110 கிராம் வெங்காயம், நறுக்கியது
5 சிறிய பச்சை மிளகாய்tamil
35 கிராம் இஞ்சி பூண்டு விழுது
1362 கிராம் ஒரு முழு கோழி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
355 மில்லி வெற்று தயிர்tamil
6 கிராம் உப்புtamil
6 புதிய கறிவேப்பிலை (விரும்பினால் சேர்க்கவும்)
575 கிராம் சமைக்ககாத மல்லிகை அல்லது வெள்ளை அரிசிtamil
980 மில்லி தண்ணீர்
1 தண்டு கொத்தமல்லி தழை
செய்முறை:
1. அரிசியை தேவையான அளவு தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து, வடித்துக் கொள்ளவும்.
2. இதற்கிடையில், மித‌மான தீயில் ஒரு பெரிய பான் அல்லது டச்சு அடுப்பில் (இடச்சுக்கனலடுப்பு) நெய்யை சூடுபடுத்திக் கொள்ளவும். இதனுடன் கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரின்ஜி இலைகளை சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் வரை, நன்கு வேகும் வரை வதக்கவும்.t
3. பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிய பின் தயிர், உப்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால்) சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் கோழி துண்டுகளை சேர்த்து சுமர் 20 முதல் 25 நிமிடங்கள், அவ்வப்போது கிளறிவிட்டும் மற்றும் கோழி துண்டுகளை திருப்பி போட்டும் சமைக்கவும், இதை நன்கு கொதிக்க விட்டு, கோழிச்சாறு சுமார் 1 கப் அளவு இருக்கும் வரை சுண்ட விடவும்.
5. இதனுடன் அரிசியை, தண்ணீர், மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். இதை நன்கு கொதிக்க விடவும். பிறகு இதை மூடி மிதமான தீயில் சுமார் 20 நிமிடம் வரை சமைக்கவும். சுமார் 12 நிமிடங்கள் கழித்து சாதம் நன்றாக வெந்துள்ளதா என்று சரிபார்க்கவும், சாதம் மிகவும் உலர்ந்து இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து தொடர்ந்து சமைக்கவும். இப்போது சூடான சுவையான பிரியாணி ரெடி

Leave a Reply