முட்டை பொடிமாஸ் (அ) முட்டை பொரியல்

வேண்டிய பொருள்கள் :

முட்டைகள் – 3

சமையல் எண்ணை – 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1 ( நறுக்கப்பட்டது)

இஞ்சி – 1/2 தேக்கரண்டி (நன்கு மசித்தது )

பச்சை மிளகாய் – 1 (நீளமாக நறுக்கப்பட்டது)

குடமிளகாய் – 1/4 கப் (விருப்பமிருந்தால் )

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுந்து – 1/2 தேக்கரண்டி

காய்ந்த வெந்தயக் கீரை  (கசூரி மேத்தி) – 1/2தேக்கரண்டி

கொத்தமல்லி – 5 கூறுகள் (நன்கு மசிக்கபட்டது )

கறிவேப்பிலை – 1 கூறு (நன்கு மசிக்கபட்டது )

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 1. முட்டைகளை நன்கு கலக்கி அடித்து வைத்து கொள்ளவும்.
 1. ஒரு நான்-ஸ்டிக் வாணலியில் எண்ணையை சுட வைத்துகொள்ளவும்.
 1. எண்ணை சூடான பின்பு அதில் கடுகு மற்றும் உளுந்தை சேர்க்கவும்.
 1. கடுகு வெடித்தவுடன், அதனுடன் காய்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து, 20 நொடிகளுக்கு வறுக்கவும்.
 1. பின்பு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
 1. வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை 2-3நிமிடங்களுக்கு சமைக்கவும்.
 1. இப்போது அதனுடன், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
 1. சில நிமிடங்கள் சமைத்துவிட்டு ,பின்பு சிறிது தண்ணீரை தெளிக்கவும்.
 1. இப்போது கலக்கிய முட்டையிலும் சிறிது உப்பு தூவி விட்டு வாணலியில் சேர்க்கவும்.
 1. மற்ற பொருட்களுடன் முட்டையும் கலக்கும் வண்ணம் நன்கு கிளறி விடவும்.
 1. வேண்டிய பதம் அடையும் வரை நன்கு கிளறிவிடவும்.

Leave a Reply