வெங்காய வடகம்

[b]தேவையானபொருட்கள்:[/b]

சாதம் – 300 கிராம்
வெங்காயம் – 200 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் – 7
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி.

[b]செய்முறை:[/b]
வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் செத்தல் மிளகாய், சோம்பு, மிளகு ஆகியவற்றை அரைக்கவும்.
அதன் பின்னர் சாதத்தையும் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் அரைக்கவும்
அரைத்த எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு தட்டில் அலுமினியப் பேப்பரை விரித்து அதில் இந்த உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி தட்டி வைக்கவும்.
இருபக்கமும் நன்கு காயும்படி திருப்பி திருப்பி வைத்து வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். இதைப் போல் வடகம் நன்கு காயும் வரை வைத்தெடுக்கவும்.
தேவையான போது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய வடகம் தயார்
[img]http://4.bp.blogspot.com/-67ZNLXneZbE/UZELL1v7YiI/AAAAAAAACwo/vo6yziFOsfg/s1600/DSC01925-001.JPG[/img]

Leave a Reply