பாகற்காய் சூப்

பாகற்காய் சூப் தேவையான பொருட்கள்

பாகற்காய்                            – 100 கிராம்
தண்ணீர்                                – 250 மி.லி.
தக்காளி                                 – 1
வெங்காயம்                        – 1
புதினா, கொத்தமல்லி   – சிறிது
மிளகு, சீரகத்தூள்            – சிறிது
உப்பு                                         – தேவையான அளவு

பாகற்காய் சூப் செய்முறை

தக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை கழுவி நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் மசித்து சூப்பை மட்டும் வடிகட்டவும். பின் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply