பைனாப்பிள் சாதம்

தேவையான பொருட்கள்:-

பைனாப்பிள் – 1 (சின்ன சின்ன துண்டுகள்)
பாசுமதி (அரிசி) – கால் கப்
நெய் – ரெண்டு ஸ்பூன்
இஞ்சி – ஒரு ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான

செய்முறை விளக்கம்:-

இதுக்குக் கொஞ்சம் புளிப்பும் இனிப்புமான செம்பழம் தான் சரியாக இருக்கும். பழுத்த பைனாப்பிள் பழம் கூடாது. மீடியம் சைஸ் பழம் ஒண்ணை எடுத்து தோல் சிவி, பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளா கட் பண்ணிக்குங்க.

ஒரு கப் சாதத்துக்கு கால் கப் பழம்ங்கிற கணக்கில் தேவைப்படும். பாசுமதி அரிசியைப் பொலபொலனு வடிச்சு ஆறவைங்க. வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பொடியா நறுக்கின ஒரு ஸ்பூன் இஞ்சி சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு வதக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நல்லா வதக்கணும்.

கடைசியா சாதத்தைப் போட்டு லேசா கிளறி இறக்கி, ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையைத் தூவினா பிரமாதமான ரைஸ் ரெடி!

Leave a Reply