தேங்காய்ப்பூச் சம்பல்

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பூ – 1 கப்

செத்தல் மிளகாய் – 5/6 (or தேவையான காரத்திற்கேற்ப)

சிறிய வெங்காயம் – 5

கறிவேப்பிலை – 1 நெட்டு

புளி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

 

செய்முறை:

•செத்தல் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை என்பவற்றை தனித் தனியே பொரித்து எடுக்கவும்.

•உப்பு, தேங்காய்ப்பூ, புளி மற்றும் பொரித்த அனைத்தையும் Food processor இல் போட்டு நன்கு கலக்கும் வரை சேர்க்கவும்.

•சுவையான சம்பல் தயார். இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை என்பவற்றுடனும் சாப்பிடலாம்.

 

Note:

கறிவேப்பிலையை பொரிக்க எண்ணெயில் போடும் போது எண்ணெய் தெறிக்கும். எனவே கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டவுடனே சிறிது தள்ளி நிற்கவும்  Food processor இல்லை எனில் உரலில் போட்டும் இடிக்கலாம். இதற்கு முதலில் பொரித்தவற்றையும் உப்பு, புளியையும் உரலில் போட்டு இடித்து விட்டு பின் தேங்காய்ப்பூவை சேர்க்க வேண்டும்

Leave a Reply