ரவா தோசை | Rava Dosai

என்னென்ன தேவை?

  • மைதா – 2 கப்,
  • அரிசி மாவு – 2 கப்,
  • ரவை – 1 கப், கடுகு,
  • பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
  • புளித்த தயிர் – 2 கப்,
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்,
  • எண்ணெய் – கால் கப்,
  • உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

 

2 கப் தயிரில் 2 கப் தண்ணீர் விட்டுக் கடைந்து கெட்டியான மோராக்கவும். அதில் மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் ரவையை வறுத்து, அந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி தாளித்துக் கலவையில் சேர்க்கவும். கலவை பால் மாதிரி நீர்க்க இருக்க வேண்டும். தோசைக்கல்லைக் காய வைக்கவும். மாவை ஒரு டம்ளரில் எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து நடுப்பகுதிக்கு சுழற்றி ஊற்றவும்.
வார்க்கக் கூடாது. அதன் மேல் பச்சை வெங்காயத்தையும், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் தூவி, பொன்னிறமாக வேகும்வரை விட்டு எடுத்துப் பரிமாறவும்.

Leave a Reply