ராகி வெஜிடபிள் கட்லெட்

ராகி வெஜிடபிள் கட்லெட் தேவையான பொருட்கள்

ராகி மாவு                                                    – 100 கிராம்

இஞ்சி                                                           – சிறிது
பூண்டு                                                          – 5 பல்
கொத்தமல்லி                                           – 1 கட்டு
பச்சைமிளகாய்                                       – 2
காலிஃப்ளவர்                                           – 6 பூக்கள்
கேரட்                                                          – 1
உரித்த பச்சைபட்டாணி                      – 1/2 கப்
உருளைக்கிழங்கு பெரியது               – 2
வெங்காயம்                                              – 1
உப்பு                                                             – 3/4 டீஸ்பூன்
ரவை                                                           – தேவையான அளவு
எண்ணெய்                                                – தேவைக்கேற்ப

 

ராகி வெஜிடபிள் கட்லெட் செய்முறை

 

இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சைமிளகாய்களை விழுதாக அரைக்கவும். காலிஃப்ளவரையும், கேரட்டையும் சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காலிஃப்ளவர், கேரட், பட்டாணிகளை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தனியாக வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், உருளைக்கிழங்கு, ராகி மாவு, அரைத்த விழுது, வெங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சேர்க்காமல், மாவாக பிசைந்து கொள்ளவும். ஒரு செலாஃபோன் பேப்பரில் (காகிதம்) ரவையை தூவவும்.
ராகி மசாலா காய்கறி கலந்த மாவுக்கலவையை எடுத்து, ஒரு எலுமிச்சை சைஸ§க்கு பந்தாக உருட்டி, ரவை மேல் போட்டு பிரட்டி வடை போல் தட்டி, மேலேயும் ரவையை தூவவும். தோசை கல்லில் எண்ணெய்யை ஊற்றி கட்லெட்டுகளை இரு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். சூடாக, சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply