பச்சைமிளகாய் துவையல்

தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய் – 15 ,
புளி – எலுமிச்சை அளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிது,
வெல்லம் – 50 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
• பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
• கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவும்.
• பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
• பின்பு மிக்சியில் பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும்.
• மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்த பின் இதில், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வெல்லம் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும்.
• வெல்லமும் எண்ணெயும் பச்சைமிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, சுவையையும் மணத்தையும் கூட்டும்.

பலன்கள்: பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வாய் கசப்பு நீங்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்துக்கு நல்லது.

Leave a Reply