மஷ்ரூம் சூப்

மஷ்ரூம் சூப் தேவையான பொருட்கள்

பட்டன் மஷ்ரூம்            – 10

உருளைக்கிழங்கு          – 1
கேரட்                                  – 1
தக்காளி                             – 2
பூண்டு                                – 2 பல்
இஞ்சி                                 – 1/2 இன்ச்
பட்டை                               – சிறிது
உப்பு, மிளகுபொடி        – தேவைக்கேற்ப
வெண்ணெய்                  – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி                – சிறிது

 

மஷ்ரூம் சூப் செய்முறை

உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும். தக்காளி நறுக்கி கொள்ளவும். மஷ்ரூமை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பட்டை, இஞ்சி, பூண்டு போட்டு வேக விடவும். ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.

நறுக்கி வைத்துள்ள பட்டன் மஷ்ரூமை, வெண்ணெயை சூடாக்கி அதில் போட்டு நன்கு வதக்கி, வடிகட்டி எடுத்து வைத்துள்ள சூப்பில் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். மஷ்ரூம் வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply