நாட்டுக் கோழி குழம்பு

தேவையான பொருட்கள் :

நாட்டு கோழி – 1 கிலோ
சிறிய வெங்காயம் – 250 கிராம்
தேங்காய் – 1 மூடி
தக்காளி – 250 கிராம்
யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி
இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி
பெ.சீரகம் – 1 கரண்டி
சீரகத்தூள்- 2 கரண்டி
கடுகு – 1/2 கரண்டி
பெ.சீரகத்தூள் – 1 கரண்டி
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள்- 1/2 கரண்டி
பட்டை,கிராம்பு – 2
கறிவேப்பிலை-1 கொத்‌து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 250 கிராம்

தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எடுத்து கொள்ளவும் .தக்காளி ,வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பெ.சீரகம் ,கடுகு,பட்டை,கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை
முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

இப்போது இஞ்சி , பூண்டு விழுது , தக்காளி, சீரகத்தூள் மஞ்சள்தூள் ,ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் . அதனுடன் சுத்தம் செய்து நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு வேகி வரும் போது பால் சேர்த்து வத்த விட்டு பெ.சீரகத்தூள் தூவி இறக்கவும். இப்போது சுவையான நாட்டு கோழி குழம்பு தயார்.

கைக்குத்தரிசி சோறுடன் சாப்பிடுங்க நல்லா இருக்கும் .

Leave a Reply