சமையல்,பைனாப்பிள் சாதம்,

pineapple_002

அன்னாச்சி பழத்தில் சத்துக்கள் மட்டுமல்லாது உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் சாதம் செய்தும் சாப்பிடலாம்,

இந்த அன்னாச்சிபழ சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தனமானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப் அன்னாசிப்பழம் – 1 கப் (சிறிதாக நறுக்கியது), வெங்காயம் – 1 (சிறியது மற்றும் நறுக்கியது) , இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது), கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது), புதினா – சிறிது (நறுக்கியது), மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், மிளகு தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அன்னாசித் துண்டுகளை போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சியை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.

பின்பு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 4 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து, அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கி, சாதம் மற்றும் மிளகு தூள் போட்டு, நன்கு கிளறி 1 நிமிடம், எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி!!

Leave a Reply