உருளை கிழங்கு மசாலா (potato gravy)

potato-gravy

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு – 4 பெரியது
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10
இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
 
தாளிக்க :
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
 
பொடி வகைகள் :
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
 
செய்முறை :

                 1.உருளை கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கிக்கொள்ளவும்.
                 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கி பின் உருளை கிழங்கு மற்றும் பொடி வகைகளையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கடைசியில் உப்பு போட்டு கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்.
 
சுவையான உருளை கிழங்கு மசாலா ரெடி.

Leave a Reply