முட்டை தேங்காய் மசாலா

1907513_1543215912619084_7696580637532212635_n-300x225தேவையான பொருட்கள்:
முட்டை – 4 (வேக வைத்தது)
தேங்காய் விழுது – 1/2 கப்
வெங்காயம் – 1 (அரைத்தது)
தக்காளி – 1 (அரைத்தது)
பூண்டு – 4-5 (லேசாக தட்டியது)
பச்சை மிளகாய் – 3
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

*அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

*பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

*பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளற வேண்டும்.

*பிறகு மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து, உப்பு போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

*மசாலா நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை தேங்காய் மசாலா ரெடி!!!

Leave a Reply