ஸ்பைசி ஃப்ரூட் சாலட்

 தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன்                      – 1 கப்
கேரட்                                      – 1
மாதுளை முத்துக்கள்      – 1 கப்
அன்னாசிப்பழம்                 – 1/4 கப்
ஆப்பிள்                                  – 1
தயிர்                                        – 1/2 கப்
சாட் மசாலா                        – 1 டீஸ்பூன்
உப்பு                                        – தேவையான அளவு

 

 செய்முறை
ஸ்வீட் கார்னை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். அன்னாசிப் பழம், ஆப்பிள் முதலியவற்றை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு சாலட் பவுலில் போட்டு அத்துடன் தயிர், சாட் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து குளிர வைத்து பரிமாறவும்.

Leave a Reply