பச்சைப் பட்டாணி சுண்டல்

தேவையானவை:

பச்சைப் பட்டாணி – 200 கிராம்,

துருவிய கேரட் – 2 டீஸ்பூன்,

கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,

கடுகு, எண்ணெய் – ஒரு தலா டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – ஒன்று.

 

 

செய்முறை: 

தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து… குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

Leave a Reply