உளுத்தம்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

 • அரிசி மாவு  –  4 கப்
 • உளுத்தம்பருப்பு  – 1 கப்
 • மிளகாய்தூள்  – 1 மேசைக்கரண்டி
 • சீரகம் – 1 /2  தேக்கரண்டி
 • வெள்ளை எள் – 1 / 2  தேக்கரண்டி
 • வெண்ணெய்  – 1 மேசைக்கரண்டி
 • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

 • உளுத்தம்பருப்பை லேசாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
 • ஆறிய பின்பு  அரைத்துக் கொள்ளவும்.
 • வெண்ணையை உருக்கி கொள்ளவும்.
 • அரிசி மாவு, உளுத்தம்பருப்பு மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும்
 • ஒன்றாக கலந்து  சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப்   பிசைந்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
 • பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து  இரண்டு  பக்கமும் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு
காரம் வேண்டாதவர்கள் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டாம்.

Leave a Reply