லிச்சி – வெள்ளரி சாலட்

லிச்சி - வெள்ளரி சாலட்

தேவையான பொருட்கள்:லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 6,
வெள்ளரி – 1
தேன் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – ஒன்று,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• லிச்சி பழம், வெள்ளரியை துண்டுகளாக நறுக்கவும்.

• எலுமிச்சையை பிழிந்து சாறு பிழிந்து வைக்கவும்.

•  லிச்சிபழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.

• அதனுடன் உப்பு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply