லெமென் ரைஸ் – Lemon Rice

பாசுமதி அரிசி = ஒன்னறை டம்ளர்
லெமென் = இரண்டு

ஊறவைக்க ( அரை மணி நேரம் ஊறவைக்கவும்)

வேர்கடலை = இரண்டு மேசை கரண்டி
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி

தாளிக்க‌

எண்ணை = ஐந்து தேக்கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி

உளுந்து பருப்பு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை ‍ = இரண்டு ஆர்க்
பூண்டு = இரண்டு
பெருங்காயபொடி = ஒரு பின்ச்
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு

1. சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும், வடிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை விடவும், அப்போது தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

2 எலுமிச்சையை சாறு பிழிந்து கொட்டை இல்லாமல் வடிகட்டி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

3. வாயகன்ற சட்டியை காய வைத்து தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கருகாமல் தாளித்து ஊறவைத்த வேர்கடலை மற்றும் கடலை பருப்பை சேர்த்து தாளித்து அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை கலவையை ஊற்றவும்.

4. தாளித்த கலவையை சாதத்தில் கொட்டி உதிரியாக கிளறி விட்டு இரகக்வும்.

குறிப்பு

கடலை பருப்பு,வேர்கடலை ஊறவைத்து சேர்ப்பதால் வயதானவர்களும் எளிதாக கடித்து சாப்பிடலாம்.
இது பார்க்க கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம். இதே போல் வேக வைத்த கருப்பு கொண்டை கடலையையும் போட்டு லெமென் ரைஸ் செய்யலாம்
எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை ஏதாவது கட்டு சோறு தான்.
இதுக்கு அவித்த முட்டை (அ) பீன்ஸ் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷமன்மற்றபடி சிக்கன்,மட்டன், மீன் பிரையும் மசால் வடையும் செய்தால் கூட நல்ல இருக்கும்.

Leave a Reply