மாங்காய் ஊறுகாய் – Mango Pickle

இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.கர்பிணிபெணகளுக்கும் மசக்கையின் போது ஏற்படும் வாய் கசப்பு கொமட்டலுக்கு ஏற்ற அருமையான ஊறுகாய்.
கர்பிணி பெண்களுக்கு  மற்றும் இல்லை அனைவருக்கும் இந்த ஊறுகாய் பிடிக்கும்.
ஒரு பெரிய மாங்காய் = ஒன்று
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு

வறுத்து பொடிக்க

காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் ‍ = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் ‍= ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்

1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ள‌வும்.
2. மாங்காய‌யை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும், கொட்டையை தூக்கி போட்டுவிட‌ வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழ‌ம்பில் போட்டு கொள்ள‌லாம்.
3. ஒரு வான‌லியில் எண்ணை விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளிக்க‌வும்.
4. மாங்காயை போட்டு கிள‌ற‌வும். உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து பொடித்த‌ பொடியையும் போட்டு ந‌ன்கு பிற‌ட்டி ஐந்து நிமிட‌ம் வேக‌விட்டு க‌டைசியாக‌ வெல்ல‌த்தை தூவி இர‌க்க‌வும்.
செய்யும் போதே நாவில் நீர் ஊற‌ ஆர‌ம்பித்து விடும்.
அப்ப‌டியே இர‌ண்டு முன்று நாட்க‌ளில் சாப்பிட்டு முடிக்க‌ வேண்டிய‌து தான். க‌ரிபிணி பெண‌க‌ள் வாய்க்கு ருசிப‌டும், ஏன் ந‌ம‌க்குதான்.
குறிப்பு
வ‌றுத்து பொடிக்க‌ சோம்பேறி த‌ன‌மா ? அப்ப‌டியே எண்னையில் போட்டு தாளிக்க‌வும், மிள‌காய் தூள் ஒரு தேக‌க்ர‌ண்டி, வெந்த‌ய‌ பொடி (அ) வெந்த‌ய‌ம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிற‌கு மாங்காயை போட்டு பிற‌ட்ட‌வும், க‌ல‌ரும் சூப்ப‌ராக‌ வ‌ரும்.

Leave a Reply