வெஜிடேபிள் பக்கோடா

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப் சோம்பு – 1 டீஸ்பூன் (அரைத்தது) ஓமம் – 1 டீஸ்பூன் வெந்தயக் கீரை – சிறிது கேரட் – 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது) உருளைக்கிழங்கு – 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது) பச்சை மிளகாய – 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது) கத்திரிக்காய் – 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது) வெங்காயம் – 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது) துருவிய பன்னீர் – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு பௌலில் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், சோம்பு, ஓமம் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெஜிடேபிள் பக்கோடா ரெடி!

Leave a Reply