வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை – 200 கிராம்,

காய்ந்த மிளகாய் – 2,

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,

கடுகு, எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து… வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Leave a Reply