ஈரல் சூப்

தேவையான பொருட்கள்
ஈரல்                                         – 1/4 கிலோ
சின்ன வெங்காயம்         – 15
தக்காளி                                 – 1
பச்சை மிளகாய்               – 2
மிளகு                                     – 10
சோம்பு, சீரகம்                   – 1 டீஸ்பூன்
இஞ்சி                                      – 1/2 இன்ச்
பூண்டு                                     – 2 பல்
மஞ்சள் தூள்                       – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி                     – சிறிது
உப்பு                                         – தேவையான அளவு
செய்முறை
இஞ்சியை தோல் சீவி பூண்டுடன் சேர்த்து தட்டி வைத்துக் கொள்ளவும். மிளகு, சோம்பு, சீரகம் முதலியவற்றை கரகரப்பாக பொடியாக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு போட்டு பின் தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, கடைசியாக ஈரலையும் போட்டு வதக்கவும். ஈரல் நன்கு வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply