தக்காளி – வெள்ளரிக்காய் சாலட்

 

தக்காளி - வெள்ளரிக்காய் சாலட் தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1
தக்காளி – 1
சிகப்பு வெங்காயம் – சிறியது 1
துளசி இலை – 10
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒன்றும் பாதியாக பொடித்தது – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
வினிகர் – 2 ஸ்பூன்

செய்முறை :

• வெள்ளரிக்காயை தேவையான அளவில் வெட்டிக் கொள்ளவும்.

• தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு வெட்டிக் கொள்ளவும்.

• வெங்காயத்தை அதே போல் வெட்டிக் கொள்ளவும்.

• துளசி இலையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், போட்டு நன்றாக கலக்கவும்.

• பின்னர் அதில் உப்பு, மிளகு தூள், ஆலிவ் ஆயில், வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக துளசி இலையை தூவி பரிமாறவும்.

Leave a Reply