அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

தேவையான பொருட்கள் :

அன்னாசிபழம் – பாதி
இளநீர் – 1 கப்
இளநீரில் உள்ள தேங்காய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
இளநீர் வழுக்கை – சிறிதளவு

செய்முறை :

• இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய அன்னாசி பழத்தில் 10 துண்டுகளை தனியாக வைக்கவும்.

• மிக்சியில் அன்னாசி பழம், பாதி இளநீர், நறுக்கிய இளநீரில் உள்ள தேங்காய் போட்டு நன்றாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை கிளாசில் ஊற்றி அதில் ஐஸ் துண்டுகள், நறுக்கிய இளநீர் வழுக்கை, மீதமுள்ள இளநீர் சேர்த்து பருகவும்.

• தேவைப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.

Leave a Reply