மைசூர் பாகு

தேவையான பொருள்கள்:

சர்க்கரை                   3 கப்
கடலை மாவு          1 கப்
நெய்                             3 கப்

 

செய்முறை:
சர்க்கரையை ஒரு கரண்டி தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். (கரையும் வரை) பாகு வெந்ததும் வேறு ஒருவரை, நன்கு சலித்த கடலை மாவை அதில் தூவச் சொல்லி தோசைக் கரண்டியால் கை படாமல் கிளறிக் கொண்டே இறக்கவும்.

(10 நிமிடங்கள்) மாவும், பாகும் சேர்ந்ததும் நெய்யைக் கொஞ்சம் கொங்சமாக விட்டு கிளறி வாசனை வந்ததும் மேலே வெளுப்பாக நுரைத்து வந்ததும் சட்டியில் ஒட்டாமல் வரும்போது மைசூர் பாகு தட்டில் நெய்யைத் தடவி வைத்து அதில் கிளறயிதைத் தூக்கி ஊற்றவும்.

தட்டின் விளிம்பைப் பிடித்துக் குலுக்கி விட்டால் சமமாகிவிடும். நெய் முழுவதும் உள்ளே இறங்கியதும் கத்தியால் சதுரத் துண்டுகளாகவோ நீளமாகவோ துண்டங்கள் போடவும். (பாகுடன் மாவு ஒன்று சேர்ந்ததும் 3 முறை நுரை தட்டியதும் இறக்கிவிடவும்)

காய்ச்சிய பாலில் படிந்திருக்கும் பால் ஆடையை எடுத்து இரவில் படுக்கும் முன்பு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கடலை மாவு சேர்த்து முகத்தைக் கழுவினால் முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதோடு மட்டுமின்றி, தோலில் ஒருவித பளபளப்பும் ஏற்படும்.

Leave a Reply