இதோ மெக்சிகன் ரைஸ் : செய்முறைகளுடன்..!

தேவையான பொருட்கள் :
* முட்டைக்கோஸ் – 50 கிராம்
* வெங்காயம் – 2
* தக்காளி – ஒன்று
* குடைமிளகாய் – ஒன்று
* பூண்டு – 2 பல்
* மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
* எண்ணெய் – 3 தேக்கரண்டி
* நெய் – ஒரு தேக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு
* அரிசி – ஒரு கப்

செய்முறை :
* முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

* ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.

* பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.

* பேனில் (Pan) ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.

* நிறம் மாறியதும் அதை எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் போட்டு அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒன் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பேனில் (Pan) நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கி நிறம் மாறியதும் எடுத்து வைக்கவும்.

* அதே பேனில் (Pan) மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைக்கோஸை போட்டு வதக்கி எடுக்கவும்.

* மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து மிளகாய்த் தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.

* காய் வதங்கியதும் இறக்கி வதக்கிய வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி பரிமாறவும்.

Leave a Reply